Posts

Showing posts from February, 2024

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர   வர்ணனை ***  ஸோமஸூரிய வீதிகளிக்கெலதல்லி ஹேமனிர்மித ஸௌததோளி ராமணீயக ரத்னகளஸதங்கடியிர்து வா மஹா த்வாரகாபுரதி ||11   சந்த்ர வீதி , சூர்ய வீதிகளின் இரு புறமும் தங்கத்தால் நிர்மிதமான கட்டிடங்களின் வரிசை இருந்ததைப் போல , அழகான ரத்ன கலசங்கள் கொண்டதான கடைகள் இருந்தன . இவை அனைத்தும் அந்த சிறந்ததான த்வாரகாபுரத்தில் இருந்தன .   ராகரஸதோளனவரத காதலர ஸம் போகக்கெ ஸமவாகலெனுத ஆகமக்ஞரு ஹஞ்சிகொட்டந்தெ போடிய பொகதங்கடிகளொப்பிதவு ||12   காம வயப்பட்ட காதலர்கள் எப்போதும் அவர்கள் சம்போகத்தில் ஈடுபடட்டும் என்பதற்காக , அறிஞர்கள் பரிந்துரைத்ததைப் போல , ( வெற்றில் ) பாக்கு விற்கும் கடைகள் ( எல்லா இடங்களிலும் ) நிரம்பியிருந்தன .    கலெயரிதமல பாவக்ஞரு தம்ம கா தலெயர கரெவ ஸன்னெயனு ஸலெ பரிகரஹிஸி ஷோபிஸுதிர்ப லலித பெ ள்ளெலெயங்கடிகளொப்பிதவு ||13   கலைகளை அறிந்த கலைஞர்கள் , தம் காதலர் / காதலிகளை அழைக்கும் சமிக்ஞையை உணர்ந்து , அதற்கேற்பதான ஒளிர

#29 - சந்தி 3 - 7,8,9,10 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர   வர்ணனை ***  மொனெகார களர கண்டிஸலெந்து வஸுதேவ தனய சக்ரகெ விஷ்வரூப வினயதி கொட்டனெம்பந்ததி கோடெய தெனெகளித்துவு ஸுத்தபளஸி ||7   துஷ்ட சைனிகர்களை வெல்வேன் என்று வஸுதேவ தனயனான ஸ்ரீகிருஷ்ணன் சக்கரத்திற்கு அவனின் விஸ்வரூபத்தை மரியாதையுடன் காட்டினான் என்று சொல்வதைப் போல , கோட்டைகளின் உப்பரிகைகள் சுற்றிலும் இருந்தன .   தேஷாதிப க்ருஷ்ணராயங்கெ களரிந்த மோஸவ பரகொடெனென்னுத சேஷ மண்டளிஸிதந்ததி வஜ்ரதாள்வேரி லேஸாதுதேவண்ணிஸுவெனு ||8   நாட்டின் அரசனான கிருஷ்ண ராயனுக்கு எதிரிகளால் மோசம் ஆகக்கூடாது என்று , சர்ப்பம் சுற்றிலும் சுற்றிக் கொண்டதைப் போல , சுற்றிலும் அகழி இருப்பதான வஜ்ரம் போல வலிமையான கோட்டைகள் , மிகவும் அபாரமாக இருப்பதை நான் எப்படி வர்ணிப்பேன் ?   பலினந்தன முக்ய களரெம்ப ம்ருககுல சலிஸி தன்னிதிர்வரெ பிடிது சலதி ஹொய்வெனெம்ப ரௌத்ரதிம் கோடெய ஹுலிமொக கண்கெ ரஞ்ஜிஸிது ||9   பலியின் மகன் ( பாணாசுரன் ) முதலான துஷ்ட மிருகங்க