#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை *** ஸ்ருதி ஷாஸ்த்ராகம முபனிஷத்பௌராண ஸ்துதிவெத்து ஹரிய நிட்டிஸலு அதி பகுதியலி பந்தந்தெ ரஞ்ஜிஸிது கோ மதி நதி த்வாரகா புரதி ||56 ஸ்ருதி , சாஸ்திர , ஆகம , உபநிஷத் , புராண ஆகியவற்றை பாடியவாறு , ஸ்ரீஹரியை பார்ப்பதற்கு , மிகவும் பக்தியுடன் வந்ததைப் போல , த்வாரகா புரத்தில் , கோமதி நதி பாய்ந்து வந்தது . வர மோஹன தரங்கிணியெம்ப காவ்யவ பரெதோதி கேளித ஜனர தரணி சந்த்ரமருள்ளனக ஸத்க்ருபெவெத்து பொரெவ லக்ஷ்மீகாந்த பிடதெ ||57 வர மோஹன தரங்கிணி என்னும் இந்த காவியத்தை எழுதி , படித்து , கேட்கும் மக்களை , லக் ஷ்மிகாந்தன் விடாமல் , சூரியன் சந்திரர்கள் இருக்கும்வரை அருளி காப்பான் . 3. த்வாரகாபுர வர்ணனை மாணதரஸுவந்தெ மாட்திரதிக ஸு ஜாணர ஞான லோசனகெ காணபர்பந்தெ கன்னடதலி நாரா யணன ஸத்க்ருபெய விஸ்தரிஸு ||1 வேறெங்கும் போய் தேடுமாறு செய்யாதே . அறிவாளிகளின் ( ஸஜ்ஜனர்களின் ) ஞானத்திற்கு எட்டுமாறு...