#24 - சந்தி 2 - பத்யங்கள் 44,45,46,47 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை
***
கொனெவாளெ குஸுமமஞ்ஜரி முக்ய
ஷாலிய
கொனெகளனகிவ கீரிகளு
கொனெகண்ண பாமரியர திட்டிகண்டுரு
ள்கணெயெந்து கொனெகெ பாரிதுவு ||44
வாழையின் நுனி, பூக்கள் மற்றும் நெல்லினை தின்ன வரும் கிளிகள், மிகவும் கவனத்துடன் காவல் காத்துக் கொண்டிருக்கும் பெள்களின் பார்வையைக் கண்டு, கூரான வேல் என்று நினைத்து, பாய்ந்து பறந்தன.
ஸுடிவெத்து கொனெயிந்தெ மகுளெ
பந்தெரகுவ
நிடிலாக்ஷன ஷத்ரு ஹயவ
குடில குந்தலெயரத்தரிஸலவர தொண்டெவ
ண்ணடிகெ பண்ணெந்தெரகிதுவு ||45
அப்படி பறந்து சென்று, மறுபடி சிறிது நேரத்தில் பறந்து வருவதான, ருத்ரதேவரின் எதிரியான காமனின் பறவையான கிளிகள், அப்படிய் நெல்லை காவல் காத்து வரும் பெண்களின் அழகான குரலுக்கு மயங்கி விழுந்தன.
நெத்தியொளு பாருவ கிளிவிண்டு
பஜ்ஜெய
ஸத்திகெயந்தெ மண்டலிஸெ
மத்தகாஷினியர திட்டி ஷங்கத காவ
தெத்திஸிதந்தெ ஷோபிஸிது ||46
பச்சை வண்ண கிளிகள், நெற்றியின் மேல் பச்சை குடையைப் போல எதையோ (கிரீடம் போல) வைத்திருப்பதைக் கண்டு, அதை பார்க்கத் துவங்கிய அந்த பெண்களின் பார்வையானது மிகவும் கூர்மையாக இருந்தது.
கந்துகொரலனொளு காதல்கெ ஸ்மர
தன்ன
தொந்து பில்லது ஸாலதெந்து
தந்தில்லி எளெஸிதனெம்பந்த பெள்கர்பு
ஸந்தணிஸித்து பனபனதி ||47
ஈஸ்வரனுடன் போராடுவதற்கு தனது ஒரு வில் போதாது என்று, மன்மதன் இங்கு வந்து வளர்த்ததைப் போல பற்பல கரும்புகள் இங்கு அனைத்து வன, வனங்களிலும் வளர்ந்து நிற்கிறது.
***
Comments
Post a Comment