#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

ஸ்ருதி ஷாஸ்த்ராகம முபனிஷத்பௌராண

ஸ்துதிவெத்து ஹரிய நிட்டிஸலு

அதி பகுதியலி பந்தந்தெ ரஞ்ஜிஸிது கோ

மதி நதி த்வாரகா புரதி ||56 

ஸ்ருதி, சாஸ்திர, ஆகம, உபநிஷத், புராண ஆகியவற்றை பாடியவாறு, ஸ்ரீஹரியை பார்ப்பதற்கு, மிகவும் பக்தியுடன் வந்ததைப் போல, த்வாரகா புரத்தில், கோமதி நதி பாய்ந்து வந்தது. 

வர மோஹன தரங்கிணியெம்ப காவ்யவ

பரெதோதி கேளித ஜனர

தரணி சந்த்ரமருள்ளனக ஸத்க்ருபெவெத்து

பொரெவ லக்‌ஷ்மீகாந்த பிடதெ ||57 

வர மோஹன தரங்கிணி என்னும் இந்த காவியத்தை எழுதி, படித்து, கேட்கும் மக்களை, லக்ஷ்மிகாந்தன் விடாமல், சூரியன் சந்திரர்கள் இருக்கும்வரை அருளி காப்பான். 

3. த்வாரகாபுர வர்ணனை

மாணதரஸுவந்தெ மாட்திரதிக ஸு

ஜாணர ஞான லோசனகெ

காணபர்பந்தெ கன்னடதலி நாரா

யணன ஸத்க்ருபெய விஸ்தரிஸு ||1 

வேறெங்கும் போய் தேடுமாறு செய்யாதே. அறிவாளிகளின் (ஸஜ்ஜனர்களின்) ஞானத்திற்கு எட்டுமாறு, கன்னடத்தில், ஸ்ரீமன் நாராயணனின் கருணையை நன்றாக விளக்குவாயாக. 

ஸுமனஸதிந்தெ கேளாதொடெ ஸுக்ஞான

ப்ரமதெ நின்னய கர்ணகளிகெ

அமரித மணிதாடங்கவெனலு பேளுவெ

ரமணீயவாத மெல்லதெய ||2 

நல்ல ஞானத்தை கொண்டவர்களே, இதை நல்ல மனதுடன் கேட்பீர்களாக. உன் காதுகளுக்கு ஆபரணமாக திகழும் ரத்ன தோடுகளைப் போல இதை நான் சொல்வேன். இது மிகவும் அழகான மிகச்சிறந்த கதையாகும். 

***


Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி