#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 3 : த்வாரகாபுர வர்ணனை

*** 

ஸோமஸூரிய வீதிகளிக்கெலதல்லி

ஹேமனிர்மித ஸௌததோளி

ராமணீயக ரத்னகளஸதங்கடியிர்து

வா மஹா த்வாரகாபுரதி ||11 

சந்த்ர வீதி, சூர்ய வீதிகளின் இரு புறமும் தங்கத்தால் நிர்மிதமான கட்டிடங்களின் வரிசை இருந்ததைப் போல, அழகான ரத்ன கலசங்கள் கொண்டதான கடைகள் இருந்தன. இவை அனைத்தும் அந்த சிறந்ததான த்வாரகாபுரத்தில் இருந்தன. 

ராகரஸதோளனவரத காதலர ஸம்

போகக்கெ ஸமவாகலெனுத

ஆகமக்ஞரு ஹஞ்சிகொட்டந்தெ போடிய

பொகதங்கடிகளொப்பிதவு ||12 

காம வயப்பட்ட காதலர்கள் எப்போதும் அவர்கள் சம்போகத்தில் ஈடுபடட்டும் என்பதற்காக, அறிஞர்கள் பரிந்துரைத்ததைப் போல, (வெற்றில்) பாக்கு விற்கும் கடைகள் (எல்லா இடங்களிலும்) நிரம்பியிருந்தன 

கலெயரிதமல பாவக்ஞரு தம்ம கா

தலெயர கரெவ ஸன்னெயனு

ஸலெ பரிகரஹிஸி ஷோபிஸுதிர்ப லலித பெ

ள்ளெலெயங்கடிகளொப்பிதவு ||13 

கலைகளை அறிந்த கலைஞர்கள், தம் காதலர் / காதலிகளை அழைக்கும் சமிக்ஞையை உணர்ந்து, அதற்கேற்பதான ஒளிர்வதான வெற்றிலை விற்கும் கடைகளும் (எல்லா இடங்களிலும்) பரவியிருந்தன. 

ஸடிலித முடி பெமர்வனிகளு தீவி தொ

ட்டிடுவாஸ்ய அலுகுவ குசதி

கடு ஸொபகாந்து கந்தவ மகள்சுவ ஹெங்க

ளடஸிதங்கடிகளொப்பிதவு ||14 

அவிழ்த்து விடப்பட்ட கூந்தல், வியர்வை நிரம்பி வழியும் முகம், அசைந்தாடும் முலைகள் கொண்ட பெண்களால், அதிகமான அழகினைப் பெற்ற சந்தனத்தை தேய்த்து அரைக்கும் சந்தனக் கடைகள் (எல்லா இடங்களிலும்) பரவியிருந்தன. 

***


Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி