#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 3 : த்வாரகாபுர வர்ணனை

*** 

த்வாராவதிய பட்டணத ஸம்பூர்ண ஷ்யங்

காரவ பேள்வனெந்தெனலு

நீரஜபவகரிவானேனு கஹன வி

ஸ்தாரதி பேள்வெ பல்லனித ||3 

த்வாராவதி பட்டணத்தின் முழுமையான அழகினை வர்ணிப்பது சொல்வேன் என்று சொல்வதற்கு ப்ரம்ஹ தேவருக்கும் அஸாத்தியம். அப்படியிருக்கையில் நான் என்ன சிறியவன்?. எனக்கு தெரிந்தவரை விளக்கமாக கூறுவேன். 

ஜலகெய்ய ஷரப ஷார்தூல கண்டீரவ

நெலஜேஷ்ட நஹுஸிய பூத

கெல ம்ருக பக்‌ஷியிந்தெஸெதித்து ரைவதா

சல த்வாரகிய பாஹ்யதலி ||4 

வாத்து, ஷரப, புலி, சிங்கம், மான் போன்ற பல மிருக, பக்ஷிகள் இருப்பதான த்வாரகைக்கு வெளியே இருப்பதான ரைவத பர்வதம் மிகவும் அழகாக ஒளிர்ந்தது. 

மகள கண்டன கொடெ மஹதாதி தைத்யரு

ஜகளகெ பப்பரெந்தெனுத

நெகளானெ மீன்களனொளகொண்டு பந்து பே

ரகளாதுதப்தி த்வாரககெ ||5 

தன் மகளின் கணவனுடன் (பகவந்தன்) அசுரர்கள் போருக்கு வருவார்கள் என்று முதலை, யானை, மீன்கள் ஆகியவை சேர்ந்து வந்து, த்வாரகையை சுற்றிலும் ஒரு அரணாக இருந்தன. 

ஸுத்தண மணிகல்ல ஹொங்கோண்டெ நோடலு

தத்தளகைவுவக்‌ஷிகளு

கொத்தள நிசயவு கொளத பரிகெயரிகள

ஹெத்தள கண்டனந்திஹுது ||6 

த்வாரகையை சுற்றியிருக்கும் ரத்னங்களின் கற்களை, அவற்றின் அழகினை பார்ப்பதற்கு, பறவைகள் பாய்ந்து வந்தன. கோட்டை கொத்தளங்களின் வரிசையானது, சுற்றியிருக்கும் குளங்கள் (அகழிகள்) எதிரிகளை பெற்றவளின் கணவனாக தோன்றும்படி இருந்தது

***


 

Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி