#17 - சந்தி 2 - பத்யங்கள் 16,17,18,19 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

நகரபட்டண கேட கர்வட புர க்ரா

மகளெம்ப பஹு பெஸராந்து

ஸொகயிஸுதிப்புவா தேஷதி பீளுவ

ள்ளிகளில்ல கேளாயதால்கி ||16 

நகரம், பட்டணம், க்ராமம், மலைகளால் சூழப்பட்ட ஊர், க்ராமம் என்னும் பற்பல பெயர்களைக் கொண்டு மிளிர்ந்து கொண்டிருக்கும் அந்த தேசத்தில், குக்கிராமங்களே இல்லை, கேள் 

ராராஜிஸுதிப்ப தொரெஸாலு நிகிளாக்ர

ஹார ஷட்தர்ஷனார்யரிகெ

வீர மான்யவனித்து புரகளொப்பிதவு

த்வாராவதிய தேஷதொளு ||17 

ஒளிர்வதான அந்த தேசத்தில், அற்புதமான அக்ரஹாரங்கள், ஷட்தர்ஷங்களில் வித்வாம்ஸர்களுக்கு (ஸாங்க்ய, யோக, ந்யாய, வைஷேஷிக, மீமாம்ஸா, வேதாங்கங்கள்) மானியமான அளிக்கப்பட்ட புரங்களும், அந்த த்வாராவதி க்ஷேத்திரத்தில் இருந்தது. 

ஆவாவ க்ராமானுக்ராமதி ஷிவ விஷ்ணு

தேவாலய பாத்ரபோக

தீவித ம்ருஷ்டான்ன ஸத்ரதொத்தினல்லி ரா

ஜீவ பர்கொளகளொப்பிதவு ||18 

அந்தந்த க்ராமங்களில் சிவ, விஷ்ணு தேவாலயங்கள் இருந்தன. அங்கு சுவையான அன்ன சத்திரங்கள் இருந்தன. அதற்கு அருகிலேயே, அழகான குளங்கள் ஒளிர்ந்தன. 

ஸமய நிஷ்டரு உன்னத கீர்த்திவிதரு வி

க்ரம வித்யெ புத்திகதிகரு

ஸுமதிகளு அபவாச்யுத பஜகரு ஸம்

ப்ரமதி வர்த்திபரெல்ல கடெ ||19 

தர்ம நிஷ்டர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள், கல்வி கற்ற அறிஞர்கள், அறிவளிகள், பிறப்பில்லாத அச்யுதனை பஜிப்பவர்கள் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன், ஸம்ப்ரமத்துடன் அனைத்து இடங்களிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். 

***

Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி