#25 - சந்தி 2 - பத்யங்கள் 48,49,50,51 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

ஆகரதொளு ரஸதாளி பிருகாளியிந்

தாகி ஒந்தரொளகொந்து ஹளசி

மேகோளொடெதினிரஸத ஸரியொளு க்‌ஷீர

ஸாகர தும்பிதந்திஹுது ||48 

அந்த தோட்டங்களில், ரஸம் நிறைந்த அந்த கரும்புகள், வீசும் சூறாவளி காற்றினால் அசைந்தாடி, ஒன்றுக்கொன்று இடித்துக் கொண்டு, அதனால் அந்த கரும்பின் சாறு (பால்) வழிந்து, அந்த இடமே, பாற்கடல் போல காட்சியளித்தது. 

மிண்டிவெங்களனகலித சதுரரு தம்ம

தண்டிப ஸ்மரசாபவெந்து

பண்டி பெர்குடுகோலுகளிந்தலடிகிக்கி

கண்டிஸுவரு கப்புகளனு ||49 

பருவம் வராத மனைவியரிடமிருந்து தூரம் இருக்கும் ஆண்கள், தம்மை தண்டிக்கும் மன்மதனின் வில் இதுவே என்று நினைத்து, சிறு கரும்புகளை, பெரிய கரும்புகளால் (அடிப்பது போல) திட்டுவார்கள். 

பாலெய கொரளு ஹொங்கோரெ ஸுஸ்வர கரணெ

லீலா காத்ர அச்சுமணெ

பாலிர்த குச கொப்பரிகெ நிட்டெஸள்க

ண்ணாலெய மனெகளொப்பிதவு ||50 

பெண்களின் கழுத்து, தங்கப்பிடி போட்ட மண்வெட்டி போன்றதொரு கருவியைப் போலவும், அவளது குரல் (நாக்கு) ஒரு தட்டு போலவும், அவளது அழகான தேகம் ஒரு மர ஸ்டூல் போலவும், பால் இருக்கும் அவளது முலை, தேங்காய் போலவும், நீளமான அவளது கண், கரும்பு அரைக்கும் இயந்திரம் போலவும் ஒளிர்ந்தது 

முத்து நாலுகு மூலெயாதந்தெ தனிபெல்ல

துத்தக்கெ வர பஞ்ச தாரெ

பித்திஹுதாலெய மனெமனெகள முந்தெ

ஹெத்தோரெ மளலொட்டிலந்தெ ||51 

அவளது தேகம் நான்கு மூலைகள் ஆயின. அந்த ஊரில் வெல்லம் (சர்க்கரை) அனைத்து இடங்களிலும் இருந்தது. வீடுகளின் முன்னர் பெரிய மணல் மூட்டைகளை போல அவை இருந்தன. 

***


Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி