#26 - சந்தி 2 - பத்யங்கள் 52,53,54,55 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

அந்தொம்மெ வராஹாவதாரதலி கோ

விந்தெ தன்னய பீதாம்பரவ

குந்ததெ பூமிகெ போதிஸிதந்திருவுது

கந்தஷாலிய வன களிது ||52 

முன்னர் ஒரு முறை ஸ்ரீஹரி, வராக அவதாரத்தில், தன்னுடைய பீதாம்பரத்தை பூமிக்கு போர்த்தினால் என்பது போல - அறுவடை செய்து அறுக்கப்பட்டு போடப்பட்ட நெற்கதிர்களைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது. 

தாளிம்ப கர்ஜூர த்ராக்‌ஷி ஸௌரபவ

தாளிதனேக பூதோட

கேளிய வனகளித்தவு புர லக்‌ஷ்மிய

தாளிய மரகததந்தெ ||53 

மாதுளை, கர்ஜூர, த்ராக்ஷை, நறுமணம் மிக்க பூந்தோட்டம், தேங்காய் தோட்டங்கள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் அந்த ஊர் தெய்வமான லட்சுமிதேவியின் தாள மரத்தைப் போல பச்சை பசேலென்று இருந்தன. 

பலஸு நேரிலு சூத பிசுமந்த ந்யக்ரோத

சலபத்ர பில்வாமலக

லலிதாஷோக புன்னாக பாதரி ஸலெ கோ

மல ஸாலுமரகளொப்பிதவு ||54 

பலா, அருகம்புல், மா, வேம்பு, ஆல, அரளி, பில்வ, நெல்லி, அசோக, ஆகிய பற்பல மரங்கள் வரிசை வரிசைகளாக நின்று கண்களை பறித்தன. 

ஹொக்கரணெ ஹொங்களஸ தேகுலத பே

தக்கரிகர ஜபஷாலெ

ஸொக்கானெ குதுரெய வைஹாளியங்கண

திக்கெ கண்மனரெ ரஞ்ஜிஸிது ||55 

குளம், கண்களை பறிக்கும் கோயில்களின் வரிசை, பேதம் பேசும் பண்டிதர்களின் ஜபம் செய்யும் இடங்கள், குதிரை, யானைகளின் சவாரி செய்யும் இடங்கள், ஆகியவை கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை கொடுத்தன. 

***


Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி