#23 - சந்தி 2 - பத்யங்கள் 40,41,42,43 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

ஆபோ நாராயண தத்வமெந்து ப்ரா

நோபனோள்வெரெத பூஸதிய

ரூபாந்த ரோமாஞ்சனதந்தெ கந்த ஷா

லீ பலதங்குரவிஹுது ||40 

தண்ணீர் என்பது நாராயணனின் தத்வம் என்று, ப்ராணப்ரியனுடன் சேர்ந்த பூமாதேவியின் வியர்வையே ரூபம் எடுத்தததைப் போல, நெல்லின் முளை அங்கங்கு தோன்றி கண்களை பறித்தது. 

பீகி பெளெது நபகடர்தொடெ தேவர்களா

ரோகிப ஸவிகாரரல்ல

போகி மாடுவுதேனுத லஜ்ஜிஸி தலெ

வாகிதந்திஹுது ராஜான்ன ||41 

மிகவும் அதிகமாக (உயரமாக) வளர்ந்து, வானத்தை தொட்டால், தேவர்கள் அதனை உண்ண மாட்டார்கள். ஆகவே, அவ்வளவு வளர்ந்து என்ன பலன் என்று கூறியவாறு, வெட்கத்துடன் தலை குனிந்து நின்றதாம் நெல். 

மடிகள காவ புளிந்தினியர ரூப

படிகட்டபல்லவராரு

முடி தோரமொலெய பாரதிந்தலுங்குர

விடினடு பளுகவந்திஹுது ||42 

அந்த நெற்களின் வயலை (விதைகளை) காக்கும் பெண்களின் ரூபத்தை யாரால்தான் வர்ணிக்க முடியும்?. பானை போன்ற பெரிய முலைகளின் பாரத்தினால், மிகவும் மெலிந்ததான இடுப்பு மிகவும் தளர்ந்தது. 

காவன கையரகிளியந்தெ நுடிவுத

காவன பில்கோல பிடிது

காவன ரதவாஜி புஞ்ஜிஸதந்தெ கை

காவ பாமரியரொப்பிதரு ||43 

காமனின் கையில் இருக்கும் கிளியைப் போல பேசியவாறு, காமனின் வில்லினை பிடித்து, காமனின் ரதத்தின் குதிரை (அதாவது கிளி), அந்த வயலில் இருக்கும் நெற்களை வந்து மேய்க்காதவாறு காக்கும் அவர்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஆவர். 

***

Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி