#29 - சந்தி 3 - 7,8,9,10 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 3 : த்வாரகாபுர வர்ணனை

*** 

மொனெகார களர கண்டிஸலெந்து வஸுதேவ

தனய சக்ரகெ விஷ்வரூப

வினயதி கொட்டனெம்பந்ததி கோடெய

தெனெகளித்துவு ஸுத்தபளஸி ||7 

துஷ்ட சைனிகர்களை வெல்வேன் என்று வஸுதேவ தனயனான ஸ்ரீகிருஷ்ணன் சக்கரத்திற்கு அவனின் விஸ்வரூபத்தை மரியாதையுடன் காட்டினான் என்று சொல்வதைப் போல, கோட்டைகளின் உப்பரிகைகள் சுற்றிலும் இருந்தன. 

தேஷாதிப க்ருஷ்ணராயங்கெ களரிந்த

மோஸவ பரகொடெனென்னுத

சேஷ மண்டளிஸிதந்ததி வஜ்ரதாள்வேரி

லேஸாதுதேவண்ணிஸுவெனு ||8 

நாட்டின் அரசனான கிருஷ்ண ராயனுக்கு எதிரிகளால் மோசம் ஆகக்கூடாது என்று, சர்ப்பம் சுற்றிலும் சுற்றிக் கொண்டதைப் போல, சுற்றிலும் அகழி இருப்பதான வஜ்ரம் போல வலிமையான கோட்டைகள், மிகவும் அபாரமாக இருப்பதை நான் எப்படி வர்ணிப்பேன்? 

பலினந்தன முக்ய களரெம்ப ம்ருககுல

சலிஸி தன்னிதிர்வரெ பிடிது

சலதி ஹொய்வெனெம்ப ரௌத்ரதிம் கோடெய

ஹுலிமொக கண்கெ ரஞ்ஜிஸிது ||9 

பலியின் மகன் (பாணாசுரன்) முதலான துஷ்ட மிருகங்கள், தன் எதிரில் வந்தால் அவற்றை அடித்துக் கொல்வேன் என்று வீரத்துடன், கோட்டையின் சுவர்கள், பயங்கரமான புலிமுகத்தைப் போல ஒளிர்ந்தது. 

மீடாத ரம்யரத்னங்கள ஸொன்னார

மாடத பகெபகெ பந்தகள

கூடஸ்தவாத ஹொன்னகஸெய தளித க

வாடகளிர்துவெனெம்பெ ||10 

மிகச்சிறந்ததான அழகான ரத்னங்களின், தங்கமயமான பற்பல விதமான கற்களைக் கொண்டதான, ஒளிர்வதான கதவுகள் அந்த கோட்டைகளுக்கு இருந்தன. அதன் நான் எப்படி வர்ணிப்பேன்? 

***


Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி