Posts

Showing posts from January, 2024

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர வர்ணனை ***  த்வாராவதிய பட்டணத ஸம்பூர்ண ஷ்யங் காரவ பேள்வனெந்தெனலு நீரஜபவகரிவானேனு கஹன வி ஸ்தாரதி பேள்வெ பல்லனித ||3   த்வாராவதி பட்டணத்தின் முழுமையான அழகினை வர்ணிப்பது சொல்வேன் என்று சொல்வதற்கு ப்ரம்ஹ தேவருக்கும் அஸாத்தியம் . அப்படியிருக்கையில் நான் என்ன சிறியவன் ?. எனக்கு தெரிந்தவரை விளக்கமாக கூறுவேன் .   ஜலகெய்ய ஷரப ஷார்தூல கண்டீரவ நெலஜேஷ்ட நஹுஸிய பூத கெல ம்ருக பக்‌ஷியிந்தெஸெதித்து ரைவதா சல த்வாரகிய பாஹ்யதலி ||4   வாத்து , ஷரப , புலி , சிங்கம் , மான் போன்ற பல மிருக , பக் ‌ ஷிகள் இருப்பதான த்வாரகைக்கு வெளியே இருப்பதான ரைவத பர்வதம் மிகவும் அழகாக ஒளிர்ந்தது .   மகள கண்டன கொடெ மஹதாதி தைத்யரு ஜகளகெ பப்பரெந்தெனுத நெகளானெ மீன்களனொளகொண்டு பந்து பே ரகளாதுதப்தி த்வாரககெ ||5   தன் மகளின் கணவனுடன் ( பகவந்தன் ) அசுரர்கள் போருக்கு வருவார்கள் என்று முதலை , யானை , மீன்கள் ஆகியவை சேர்ந்து வந்து , த்வாரகையை சுற்றிலும் ஒரு அரணாக இருந்தன .   ஸுத்தண ம

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  ஸ்ருதி ஷாஸ்த்ராகம முபனிஷத்பௌராண ஸ்துதிவெத்து ஹரிய நிட்டிஸலு அதி பகுதியலி பந்தந்தெ ரஞ்ஜிஸிது கோ மதி நதி த்வாரகா புரதி ||56   ஸ்ருதி , சாஸ்திர , ஆகம , உபநிஷத் , புராண ஆகியவற்றை பாடியவாறு , ஸ்ரீஹரியை பார்ப்பதற்கு , மிகவும் பக்தியுடன் வந்ததைப் போல , த்வாரகா புரத்தில் , கோமதி நதி பாய்ந்து வந்தது .   வர மோஹன தரங்கிணியெம்ப காவ்யவ பரெதோதி கேளித ஜனர தரணி சந்த்ரமருள்ளனக ஸத்க்ருபெவெத்து பொரெவ லக்‌ஷ்மீகாந்த பிடதெ ||57   வர மோஹன தரங்கிணி என்னும் இந்த காவியத்தை எழுதி , படித்து , கேட்கும் மக்களை , லக் ‌ ஷ்மிகாந்தன் விடாமல் , சூரியன் சந்திரர்கள் இருக்கும்வரை அருளி காப்பான் .   3. த்வாரகாபுர வர்ணனை மாணதரஸுவந்தெ மாட்திரதிக ஸு ஜாணர ஞான லோசனகெ காணபர்பந்தெ கன்னடதலி நாரா யணன ஸத்க்ருபெய விஸ்தரிஸு ||1   வேறெங்கும் போய் தேடுமாறு செய்யாதே . அறிவாளிகளின் ( ஸஜ்ஜனர்களின் ) ஞானத்திற்கு எட்டுமாறு , கன்னடத்தில் , ஸ்ரீமன் நாராயணனி

#26 - சந்தி 2 - பத்யங்கள் 52,53,54,55 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  அந்தொம்மெ வராஹாவதாரதலி கோ விந்தெ தன்னய பீதாம்பரவ குந்ததெ பூமிகெ போதிஸிதந்திருவுது கந்தஷாலிய வன களிது ||52   முன்னர் ஒரு முறை ஸ்ரீஹரி , வராக அவதாரத்தில் , தன்னுடைய பீதாம்பரத்தை பூமிக்கு போர்த்தினால் என்பது போல - அறுவடை செய்து அறுக்கப்பட்டு போடப்பட்ட நெற்கதிர்களைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது .   தாளிம்ப கர்ஜூர த்ராக்‌ஷி ஸௌரபவ தாளிதனேக பூதோட கேளிய வனகளித்தவு புர லக்‌ஷ்மிய தாளிய மரகததந்தெ ||53   மாதுளை , கர்ஜூர , த்ராக் ‌ ஷை , நறுமணம் மிக்க பூந்தோட்டம் , தேங்காய் தோட்டங்கள் ஆகியவை இருந்தன . இவை அனைத்தும் அந்த ஊர் தெய்வமான லட்சுமிதேவியின் தாள மரத்தைப் போல பச்சை பசேலென்று இருந்தன .   பலஸு நேரிலு சூத பிசுமந்த ந்யக்ரோத சலபத்ர பில்வாமலக லலிதாஷோக புன்னாக பாதரி ஸலெ கோ மல ஸாலுமரகளொப்பிதவு ||54   பலா , அருகம்புல் , மா , வேம்பு , ஆல , அரளி , பில்வ , நெல்லி , அசோக , ஆகிய பற்பல மரங்கள் வரிசை வரிசைகளாக நின்று கண்

#25 - சந்தி 2 - பத்யங்கள் 48,49,50,51 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  ஆகரதொளு ரஸதாளி பிருகாளியிந் தாகி ஒந்தரொளகொந்து ஹளசி மேகோளொடெதினிரஸத ஸரியொளு க்‌ஷீர ஸாகர தும்பிதந்திஹுது ||48   அந்த தோட்டங்களில் , ரஸம் நிறைந்த அந்த கரும்புகள் , வீசும் சூறாவளி காற்றினால் அசைந்தாடி , ஒன்றுக்கொன்று இடித்துக் கொண்டு , அதனால் அந்த கரும்பின் சாறு ( பால் ) வழிந்து , அந்த இடமே , பாற்கடல் போல காட்சியளித்தது .   மிண்டிவெங்களனகலித சதுரரு தம்ம தண்டிப ஸ்மரசாபவெந்து பண்டி பெர்குடுகோலுகளிந்தலடிகிக்கி கண்டிஸுவரு கப்புகளனு ||49   பருவம் வராத மனைவியரிடமிருந்து தூரம் இருக்கும் ஆண்கள் , தம்மை தண்டிக்கும் மன்மதனின் வில் இதுவே என்று நினைத்து , சிறு கரும்புகளை , பெரிய கரும்புகளால் ( அடிப்பது போல ) திட்டுவார்கள் .   பாலெய கொரளு ஹொங்கோரெ ஸுஸ்வர கரணெ லீலா காத்ர அச்சுமணெ பாலிர்த குச கொப்பரிகெ நிட்டெஸள்க ண்ணாலெய மனெகளொப்பிதவு ||50   பெண்களின் கழுத்து , தங்கப்பிடி போட்ட மண்வெட்டி போன்றதொரு கருவியைப் போலவும் , அ