#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி


சந்தி 1. முன்னுரை

ஸ்ரீகிரிஜேஷ்வரனாத்மாபிராம

த்வாகீஷ பித பரந்தாம

காகினெலெய ரங்க ஸுரஸார்வபௌம ஸு

த்யாகி பாலிஸு பூர்ணகாம ||1

பார்வதிபதியான ஈஸ்வரனின் தலைவனும், பிரம்மனின் தந்தையும், உன்னத ஸ்வர்க்கவாசியும், தேவானுதேவதைகளின் சக்ரவர்த்தியும், விருப்பங்களை நிறைவேற்றும் காமதேனு கல்பவ்ருக்ஷனும் ஆன காகினெலெ ரங்கனே, எங்களை காப்பாற்று.

 ஸ்ரீ மத்குரு ராய துரிதவிஜேய து

ஷ்காம விச்சேதனாஹ்லாத

தாமஸுகுண நாஷ ஸ்வாத்விகோல்லாஸ ஸ்ரீ

ராமனுஜ முனி ஷரணு ||2

பாவங்களை ஜெயித்தவரும், கெட்ட விருப்பங்களை விட்டு, மகிழ்ச்சியே வடிவானவரும், தாமஸகுண இல்லாதவரும், ஸாத்விக குணத்தை கொண்டவரும் ஆன குருமஹாராஜ ராமானுஜரை வணங்குகிறேன்.

 அர்கனொளாடவே தமகெ கருடன கூடெ

கார்கோடக மேளவிபுதெ

தர்ககெ ராமானுஜரொளு வாதி ஸம்

பர்க்க நில்லுவெ நில்லலரிது ||3

இருட்டிற்கு சூரியனுடன் விளையாடுவது சாத்தியமா? கருடனை எதிர்த்து பாம்பு சண்டையிட்டு வெல்வதற்கு சாத்தியமா?. அப்படியே, ராமானுஜருடன் வாதத்திற்கு இறங்குபவரின் கதியும்கூட அப்படியே. அவர்களும் தோற்பார்களே தவிர வெற்றி கிடைக்காது.

ஈ ரீதிய பெம்புவடெத ஸத்குரு கர

வாரிஜோத்பவ சிஷ்ய ஜனர

ப்ரேரிஸி சதுர்வித பலவீவ தாதா

சாரியரடிகெ எரகுவெனு ||4

இப்படியான பெருமை உள்ள ஸத்குரு ராமானுஜரின் கரகமலத்திலிருந்து தோன்றிய சிஷ்யர்களை வணங்கி நான்கு வித பல புருஷார்த்தங்களை அளிக்கும் தாதாசார்யரின் பாதங்களை வணங்குகிறேன். 

***

Comments

Popular posts from this blog

#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி