#04 - சந்தி 1 - பத்யங்கள் 5,6,7,8 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

***

அடிவிடிதபுஜஸம்பவ பூஜெகெம்மை நி

ம்மடி ககனாக்ரதி மெரெயலு

அடியலிர்த்தகிள தேவதெகளெல்ல பேடி

யடியனெம்பரு க்ருஷ்ண  நிமகெ ||5 

கமல ஸம்பவனான பிரம்மனே உங்களை வணங்கும்போது, உங்களுடைய பாதத்தின் முனையில் இருக்கும்போது, அதன் கீழேயிருக்கும் அகில தேவதைகள் அனைவரும் - நாங்கள் உங்கள் சேவகன் - என்பார்கள். ஹே கிருஷ்ணனே. 

அருணாப்ஜனிளய கவாட கௌஸ்துப மணி

கிரணதிம் தெகெதொளபொக்கு

தருணி லக்‌ஷ்மிய குசவிடித கையிந்த ஸ

த்கருணவீவுது க்ருஷ்ண நமகெ ||6 

தாமரை மலரின் வீட்டின் கதவினைதன் இதயத்தில் மேல் இருக்கும் கௌஸ்துபரத்னத்தின் கிரணத்தால் திறந்து உள்ளே சென்று, லக்ஷ்மி தேவியின் மார்பினை பிடித்த கையினால், ஸ்ரீகிருஷ்ணன் நமக்கு அருளட்டும். 

க்‌ஷீரார்ணவ கன்யெ கமனிய மூர்த்தியெ

நாராயணனுரஷ்சின்ஹெ

ஓரந்தெ ஸகலைஷ்வர்ய ஸம்பன்னெ ம

த்பார நின்னது ஸுப்ரஸன்னெ ||7 

பாற்கடலில் பிறந்த பெண்ணே, நாராயணனின் இதயத்தில் இருக்கும் சின்னமே, எப்போதும் ஸகல ஐஸ்வர்ய ஸம்பன்னனும், ஸுப்ரஸன்னனும் ஆன ஹே லக்ஷ்மியே, எம் பாரங்கள் அனைத்தும் உன்னுடையதே. 

பூதளதொளு ராமநாமவ ஸுஜன

ப்ராதக்கெ வாரணாஸியலி

நீ தப்பதுஸுருவ குரு காஷிய விஷ்வ

நாத குடெனகெ ஸன்மதிய ||8 

வாரணாசியில் (காசியில்) ஸஜ்ஜன சமூகத்திற்கு தவறாமல் ராம நாமத்தை போதிக்கும் குரு காசி விஸ்வநாதனே, நமக்கு ஸன்மதியை அருள்வாயாக. 

***

Comments

Popular posts from this blog

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி