#05 - சந்தி 1 - பத்யங்கள் 9,10,11,12 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

***

நிம்மய பித க்ருஷ்ணராயன மஹிமெயனு

ஹம்மனரிது கீர்த்திபொடெ

நம்மளவல்ல ஷாரவெகொடி சதுராஸ்ய

பொம்ம பாயென்னெதெவனெகெ ||9 

சதுர்முக பிரம்மனே, உம் தந்தையான கிருஷ்ணனின் மகிமையின் சிறப்பினை அறிந்து பாடுவதற்கு எனக்கு இருக்கும் சக்தி போதாது. ஆகையால், ஷாரதையுடன் சேர்ந்து என் இதயக் கோயிலுக்கு வந்து நிலைத்திருப்பாயாக. 

க்யாதெ வேதாகமாதீதெ ஷர்வன மன:

ப்ரீதி ஷண்முக வினாயகர

மாதெ தனுஜகுலபீதெ துஹினகிரி

ஜாதெ கொடெனகெ ஸன்மதிய ||10 

புகழ்பெற்றவரும், வேத சாஸ்திரங்களால் புகழப்படுபவளும், சிவனின் அன்பிற்கு பாத்திரரானவளும், ஷண்முக, வினாயகர்களின் தாயும், ராக்ஷஸகுலர்களுக்கு எதிரியும், ஹிமவத் பர்வதத்தில் வசிப்பவளுமான ஹே பார்வதிதேவி, எனக்கு நற்புத்தியை கொடுப்பாயாக. 

ஸாவிர ஸந்தானவடெதள்கெ மமகார

தீவிஹுது பாலன மேலெ

கோவிதெ பெர்மக்கள பிட்டு ஸலெ வா

க்தேவியென்னொளகிரு தாயெ ||11 

ஆயிரம் ஸந்தானங்களைப் பெற்ற தாய்க்கு பாலகனின் மேல் பாசம் நிரம்பியிருக்கும். வித்வத்தின் தலைவியான வாக்தேவியே, உன் மூத்த மக்களை விட்டு, எனக்குள் வந்து இருப்பாயாக தாயே. 

காயகவிது நின்னது கேளு நிர்விக்ன

தாயக எனகெ ஸன்மதிய

ஜீய காருண்யதி கொடு பொம்பொளல வி

நாயக விஷ்வவல்லபனெ ||12 

ஹே தங்கமயமான வினாயகனே, எப்போதும் உன்னுடைய தேகம், நிர்விக்னத்தை கொடுக்கக்கூடியது. விஷ்வவல்லபனான நீ கருணையுடன் எனக்கு நற்புத்தியை கொடுப்பாயாக. 

***


Comments

Popular posts from this blog

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி