#06 - சந்தி 1 - பத்யங்கள் 13,14,15,16 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 1
***
அகணித லோகாதிலோகங்களுதரதி
ஸோகயிப நாராயணன
ஹெகலொளு ஹொத்து கேசரதி ஸஞ்சரிஸுவ
ககராஜ கருணிஸுதெமகெ ||13
எண்ணிக்கையற்ற அனைத்து உலகங்களில் சஞ்சரிக்கும் நாராயணனை முதுகில் தாங்கி ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பக்ஷிராஜனான கருடனே எங்களுக்கு அருள்வாயாக.
வர துக்தாப்திய மதனதிம் துஸுமாத்ர
கரளவ கரெதாக்ஷணதி
ஸுரமுக்யர பீதிவடெஸித தரணீ
தர பணிராஜ ரக்ஷிபுது ||14
பாற்கடலை கடைந்ததால் வந்த விஷத்தை எடுத்து, நொடிப்பொழுதில் தேவானுதேவதைகளை பயப்படுத்திய பூமியை தாங்கியிருக்கும் ஆதிசேஷனே உனக்கு என் நமஸ்காரங்கள்.
ஸுரபதி ஷிகி கால நிருதி வருண
வாயு
ஹரஸகனீஷான முக்ய
வர மனு முனிஜனருகளென்ன சித்தகெ
பரம ஸந்தஸவ பாலிபுது ||15
இந்த்ர (கிழக்கு), அக்னி (தென்கிழக்கு), யம (தெற்கு), நிர்ருதி (தென்மேற்கு), வருண (மேற்கு), வாயு (வடமேற்கு), குபேர (வடக்கு), ஈஷான (வடகிழக்கு) ஆகியோர் மற்றும் சிறந்தவரான மனு முனிஜனர்கள், என் சித்தத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கட்டும்.
பலி ப்ரஹ்லாத நாரத விபீஷண த்ருவ
கலிபார்த்த விதுரனக்ரூர
ஸலிலஜ ஷுக ஷௌனக புண்டரீகாத்ய
ரூலிதீவுதெமகெ ஸன்மதிய ||16
பலி, ப்ரகலாத, நாரத, விபீஷண, த்ருவ, பார்த்த (அர்ஜுன), விதுர, அக்ரூர, கமல (பிரம்ம), ஷுக, ஷௌனக, புண்டரீக ஆகியோர் நமக்கு நற்புத்தியை அளிக்கட்டும்.
***
Comments
Post a Comment