#07 - சந்தி 1 - பத்யங்கள் 17,18,19,20 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

***

உரகாலயத பெஸர்வடெதன மத்ஸ்யோ

தர ஜாதெயாத்மஸம்பவன

வரபுராணங்கள கன்னடிஸித கவீ

ஷ்வரர கொண்டாடுவெ முததி ||17 

பாம்பின் வீடான புற்றின் பெயரைப் பெற்று வால்மீகியின் (வால்மீக = புற்று) மத்ஸ்யகந்தியின் மகனான வ்யாஸரின் க்ருதிகளை கன்னடத்தில் இயற்றிய கவீஸ்வரர்களை (குமார வால்மிகி மற்றும் குமார வ்யாஸ) ஆகியோரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். 

ரவிரஷ்மி சரிஸுவ தேஷதொளிஹ தேவ

கவிகள காருண்யபடெது

ஸவிவாதுகள விஸ்தரிஸுவே கேள்வர

கிவிகெ பூஷணவப்ப தெரதி ||18 

சூர்ய கிரணங்கள் சஞ்சரிக்கும் தேசத்தில் இருக்கும் தேவ கவிகளின் காருண்யத்தைப் பெற்று, கேட்பவர்களின் காதுகளுக்கு பூஷணமாக ஆகுமாறு, நல்வார்த்தைகளை நான் விஸ்தரித்து கூறுவேன். 

வடிப்ராஸ கணனேம லக்‌ஷணவுசிதார்த்த

விடிகிரிதிஹ பாவ சித்ர

நுடி தப்பிதரெ தித்துவுதென்னய ஸங்

கடிகரு ஸலெ பல்லவரு ||19 

எதுகை, மோனை, இயைபு, குண, நேமம், லக்ஷணம், தக்க அர்த்தம் ஆகியவை நிரம்பி வழிவதாக நான் நினைக்கிறேன். ஆனால், ஏதேனும் நுடி தப்பினால் நன்றாக கற்றறிந்தவர்கள் என்னை திருத்துங்கள். 

தப்பு ஸாஸிரவிரலொளிதொந்து குணபரெ

ஒப்புகொம்பரு பல்லவரு

கப்பு கிஞ்சித்திரெ களெதினிதம்ருதவ

சப்பரிஸீண்டதிர்தபரெ ||20 

ஆயிரம் தவறுகளுக்கு நடுவே, ஒப்புக் கொள்ளும் குணம் ஒன்று வந்தால், அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். பாத்திரம் கருப்பாக இருந்தால், அதில் இருக்கும் சுவையான அமிர்தத்தை வேண்டாம் என்று குடிக்காமல் இருப்பார்களா? 

***


Comments

Popular posts from this blog

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி