#08 - சந்தி 1 - பத்யங்கள் 21,22,23,24 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

*** 

பரஹவ திளியபேடெனுதென்ன நொஸலொளு

பரெத நால்மொகனதரிந்தெ

பரஹவனரியெ நா பதவிட்டு கடிததொள்

பரெது மாடித க்ருதியல்ல ||21 

உனக்கு பரஹ (கடிதம், கட்டுரை) எழுதவராது என்று பிரம்மன் என் தலையில் எழுதியிருப்பதால், நான் எழுதுவதை அறிந்தவனல்ல. காகிதங்களில் தயார் செய்து வைத்து நான் எழுதிய க்ருதியல்ல இது. 

குப்பிய கொரல்கெ கோலகல்ல கட்டித

ருப்பி ஆகஸகெ ஹாருவுதெ

கப்பிகரானுஸுரித காவ்யவ தித்தி

ஹப்பிஸுவுது பூதளதொளு ||22 

ஒரு சிட்டுக்குருவியின் கழுத்தில் ஒரு அம்மிக்கல் கட்டினால், அதனால் உயர்ந்து எழுந்து பறக்க முடியுமா?. நான் கூறிய இந்த காவியத்தை திருத்தி, கவீஷ்வரர்கள் இதனை இந்த பூமியில் பரப்ப வேண்டும். 

நோடலு ஹஸ்தவில்லத கீஜக ஸலெ

கூட கட்டித சச்சளிகெய

கொடக கண்டு ஸைரிஸதெ நிவாஷவ

மாடலதேனு கேடஹுது ||23 

கை இல்லாத தூக்கணாங்குருவி, அற்புதமான ஒரு கூட்டினை கட்டியதை பார்த்து சகிக்கமுடியாத ஒரு குரங்கு அதனை அழித்தால் அது எவ்வளவு பெரிய தவறு? (மிகப்பெரிய தவறுதான்). 

பட்டவெரெய பிள்திங்கள நெரெய வந்தரி

வட்டலொளு ஸோதிபருண்டெ

நெட்டனெ கனகதாஸன காவ்யதி தோஷ

தட்டதெந்தரெ தப்பெனிஸது ||24 

பூர்ணசந்திரனின் வெண்மையான கிரண ப்ரவாஹங்களை, ஒரு சல்லடையில் வைத்து பிடிப்பவர்கள் இருக்கிறார்களா?. நேரடியாக, கனகதாஸனின் காவியத்தில் தோஷம் வராது என்று கூறினால், அது தவறு என்று ஆகாது

***


Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி