#09 - சந்தி 1 - பத்யங்கள் 25,26,27,28 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

 மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

*** 

ரஸிகர கர்ணயுக்மவ பொக்கு முததி ஹ்ரு

த்பிஸஜவனலரிஸி மைகெ

எஸெவ புளகதொஸகெயனித்து ஷிரவ தூ

கிஸுவுதீ வசனரசனெ ||25 

ரசிகர்களின் ஜோடியான காதுகளை அடைந்து, ஹ்ருதய கமலத்தை மலரச் செய்து, சரீரத்திற்கு ரோமாஞ்சனத்தை, மகிழ்ச்சியை கொடுத்து, அவரை மகிழ்ச் செய்வது இந்த க்ருதியின் படைப்பு (வசனங்கள்). 

ரஸபூரித ஸுப்ரபந்த விலக்‌ஷண

வெஸெவந்தெ பேள்தபெனிதனு

ஹஸனாதுதெந்து யோக்யரு தலெதூகுவோலு

உஸுருவெ க்ருஷ்ணக்ருபெயிந்த ||26 

அற்புதமான ஒரு காவியத்தின் லக்ஷணம் ஒளிர்வதைப் போலவே, இதனை நான் சொல்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது என்று யோக்யர்கள் பாராட்டுமாறு, கிருஷ்ணனின் க்ருபையினால் இதனை இயற்றுகிறேன். 

விஷக்ர்த்ருவின மேலொரகிர்துதல்லதெ

விஷத பெர்மொலெவால ஸவிது

விஷவர்ஜிதவாஹன க்ருஷ்ணகென்னய

விஷவாக்கு தாகலேனுஹுது ||27 

ஆதிசேஷனின் மேல் படுத்திருப்பது மட்டுமல்லாமல், விஷம் தடவிய  முலைப்பாலினை குடித்து, விஷம் இல்லாத கருடனை வாகனமாகக் கொண்டிருப்பவனான கிருஷ்ணனுக்கு, என் விஷம் தடவிய எழுத்து தாக்கினால், (அவனுக்கு) எதுவும் ஆகாது. 

அம்ருதார்ணவதொளு மனெகட்டிகொண்டு மே

நம்ருதான்னவ ஸுரர்கித்து

அம்ருதகர வாமலோசன க்ருஷ்ணங்கெ

அம்ருதவாக்யதி லேஸஹுதெ ||28 

பாற்கடலில் வசித்தவாறு, தேவதைகளுக்கு அமிர்தான்னத்தை அருளியவாறு, அமிர்தத்தையே பொழியும் அழகான கண்களைக் கொண்ட கிருஷ்ணனுக்கு, அமிர்த வாக்கியத்தினால், அவனுக்கு மேலும் புகழ் அதிகரிக்குமா? (இல்லை).

***


Comments

Popular posts from this blog

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி