#10 - சந்தி 1 - பத்யங்கள் 29,30,31,32 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 1
***
லேஸாவுது ஹொல்லெஹவாவுது ஸ
ர்வேஷன நாமகீர்த்தனதி
தாஸோத்தம ப்ரஹ்லாதன விக்ன வி
நாஷவாதுது ஜகவரியெ ||29
ஸர்வோத்தமனின் புகழை பெயரை பாடுவதில், நல்லது என்ன கெட்டது என்ன?. (அனைத்தும் நல்லதுதான்). (அந்த நாமஸ்மரணையின் பலத்தால்), உலகில் அனைவரும் அறிந்ததைப் போல, தாஸோத்தமனான ப்ரகலாதனின் விக்னங்கள் அழிந்து போயின.
கொடவாலு புளிவெரெதளிவுதல்லதெ
பா
ல்கடலு நாஷவனைதுவுதெ
படவங்கெ க்ருதிதோஷவல்லதெ பொம்மன
படெதாதகேதர தோஷ ||30
ஒரு குடம் பால், ஒரு துளி புளியினால் கெட்டுப் போகிறது. ஆனால், அந்த பாற்கடல் கெடுகிறது என்று உண்டா?. இந்த ஏழைக்கு (எனக்கு) இந்த க்ருதியினால் தோஷம் வரலாம். ஆனால், அந்த ப்ரம்ம ஜனகனுக்கு எந்த தோஷமும் இல்லை.
ஆதரிந்த வர்ணதோஷகளு பரம ஸம்
பதவெத்த க்ருதிகில்லவெந்து
புதராம்னாய ஷாஸ்த்ரார்த்தவ திளிது
நா
நித பேள்வே கேளாயதாக்ஷி ||31
ஆகையால், வர்ண தோஷங்களே இல்லை என்பதான மிகச்சிறந்த பாராட்டினை (செல்வத்தினை) பெற்ற இந்த க்ருதியை, அனைத்து வேத சாஸ்திரங்களின் அர்த்தங்களை அறிந்து நான் இதனை இயற்றியிருக்கிறேன். கேள், தாயே.
ஹேளு ஹிரண்யாம்பரன தாத்பரியவெ
த்தாளுகளடிதாவரெகெ
பீளுவ புருஷ ஷட்பத நின்ன வசனவ
கேளுவெ பரம ஸந்தஸதி ||32
ஸ்ரீஹரியின் தாத்பர்யத்தை விளக்கியவாறு, அறிஞர்களின் பாத கமலத்திற்கு விழுந்து வணங்கும் தும்பியே, மிகவும் மகிழ்ச்சியுடன் உன் வசனத்தை நான் கேட்பேன்.
***
Comments
Post a Comment