#11 - சந்தி 1 - பத்யங்கள் 33,34,35,36 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 1
***
பூஸர தஹன காமோத்பத்தி வர ஷம்ப
ராஸுரவதெ கந்து ஸுதன
பாஸுர லீலெ பாணன கெத்த ஜய ல
க்ஷ்மீஷன க்ருதிய வர்ணிபெனு ||33
மன்மதனின் தகனம், காமோத்பத்தி, ஷம்பராஸுரனின் வதை, மன்மதனின் மகனின் லீலை, பாணனை வென்றவனான ஜயலக்ஷ்மீஷனின் க்ருபையை வர்ணிக்கிறேன்.
வாணியதவவெம்ப வ்யவஹாரி பட்டெய
கோணியொளு தும்பித ரத்ன
ஓணியொளு செல்லிதந்திதெ நின்ன
க்ருதியெம்ப
மாணிக மன்மனோநாத ||34
வாக்தேவியின் பதி என்னும் பட்டு கோணியில் (உறையில்) நிரம்பிய ரத்தினத்தை, வழியில் இறைத்தது போல இருக்கிறது உன்னுடைய க்ருதி ரத்ன, ஹே என் இதயத்தில் இருப்பவனே.
பத்தவாகி என்னய மனதலி நெலெகொண்
டித்த நூதன யுக்தியிந்த
முத்தாகி பேளுவெ ஸ்ரீக்ருஷ்ண
மொம்மனனி
ருத்தன சரித்ர்யகளனு ||35
மிகவும் பக்தி, மரியாதுடன், என் மனதில் நிலை கொண்டிருந்த புதிய யுக்திகளினால் ஸ்ரீகிருஷ்ணனின் பேரனான அனிருத்தனின் சரிதத்தை அழகாக சொல்வேன்.
நாடோளகுள்ள ஜாணரு ஜாணெயரொடனெ
ஆடுவ ஸவிவாதுகள
பாடுகப்பவ பருடவிஸித பகெய நீ
நோடு மானினி முந்தெ முந்தெ ||36
நாட்டில் உள்ள அறிஞர்கள் கூறும் நற்பேச்சுகளை, பாடிய பாடல்களை, பாடிய விதத்தினை நீ அடுத்தடுத்து பார்.
***
Comments
Post a Comment