#12 - சந்தி 1 - பத்யங்கள் 37,38,39,40 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 1
***
பெனகனொ நினகீ மதியனித்தவ ப்ரம்ஹ
ஜனகனோ வர சரஸ்வதியோ
ஸனக ஸனந்தாத்யரோ மேல்லதெ பேளு
கனகதாஸோத்தம நனகெ ||37
உனக்கு இந்த அறிவினை அளித்தவர் விக்னேஸ்வரனோ?. பிரம்ம ஜனகனான ஸ்ரீஹரியோ?. சரஸ்வதியோ?. ஸனக ஸனந்தனரோ?. கனக தாஸோத்தமனான எனக்கு மேலதிக கதைகளை சொல்வாயாக.
தெங்கினகாய தோரத மொலெயாந்த ல
தாங்கிய பந்துகெவாய
ரங்கிப செந்துடி இனிதெனெ மோஹன
த
ரங்கிணிவேள்வெ கேளபலெ ||38
தேங்காய் போன்ற முலை கொண்ட லதாங்கியின், கோவக்காய் போன்ற வாயில், சிவந்த உதட்டின் சுவையைப் போன்றது என்று சொல்வதான மோஹன தரங்கிணியை நான் சொல்கிறேன். நீங்கள் கேட்பீர்களாக.
ஹரிஷரணர பெச்சு புத ஜனரிகெ மெச்சு
துரித வனகெ காள்கிச்சு
விரஹிகளெர்தெகிச்சு வீரர்கெ
புச்சு கே
ள்வரிகிது தனிபெல்லதச்சு ||39
ஹரிபக்தர்கள் விரும்புமாறு, அறிஞர்கள் மெச்சுமாறு, பாவம் என்னும் காட்டிற்கு காட்டுத்தீ போன்று, விரகம் கொண்டோருக்கு மனதில் பாயும் அம்பு போல, வீரர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போன்றதான இந்த காவியம், கேட்பவர்களுக்கு வெல்ல அச்சு போன்ற இனிமையானது.
கோடி ஜன்மத பாபஹர க்ருஷ்ண சரிதெய
பீடிகெயொளகொந்து பதன
பாடிஸீ கேளித ஸுஜனரிகெ முகுதி
வ
தூடிய ஸம்ஸர்க்கவஹுது ||40
கோடி ஜென்மத்தின் பாவத்தினை போக்குவதான, கிருஷ்ண சரித்ரையின் முன்னுரையுடன் ஒரு பதத்தை கவனம் கொடுத்து பாடும், படிக்கும் மக்களுக்கு, முக்தி மோக்ஷம் கண்டிப்பாக கிடைக்கிறது.
***
Comments
Post a Comment