#13 - சந்தி 1 - பத்யங்கள் 41,சந்தி 2 - 1,2,3 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 1

*** 

வர மோஹனதரங்கிணியெம்ப காவ்யவ

பரெதோதி கேளித ஜனர

தரணி சந்த்ரமருள்ளனக ஸத்க்ருபெயித்து

பொரெவ லக்‌ஷ்மீகாந்த பிடதெ ||41 

வர மோஹன தரங்கிணி என்னும் இந்த காவியத்தை எழுதி, படித்து, கேட்கும் மக்களை, ஸூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை, கருணையுடன் விடாமல், ஸ்ரீகாந்தன் காப்பான். 

2. ஸௌராஷ்ட வர்ணனை

க்ருதிவேள்தவ கனகதாஸோத்தம கேள்தவ

ள்ஸதி ஸுக்ஞான வதூடி

க்ருதிகெ கர்தனு காகினெலெயாதிகேஷவ

க்ருதிய கேள்தரெ புண்யவஹுது ||1 

இந்த க்ருதியை பாடியவர் கனகதாஸோத்தமர். கேட்டவர்கள் ஸதியர், ஸுஜ்ஞான அறிஞர்கள். இந்த க்ருதிக்கு கர்தன் காகினெலெ ஆதிகேஷவன். இந்த க்ருதியை கேட்டால் புண்ணியம் கிடைக்கும். 

வெண்டணிஸித விஷ்ணுபக்தி நந்தன கல

கண்ட நின்னய ஸவிவாது

உண்டாதுதென்னய கர்ணக்கெ பரலோக

நண்டரு கேளுவந்துஸிரு ||2 

சூழ்ந்திருக்கும் விஷ்ணு பக்தி என்னும் நந்தவனத்தில் ஒரு குயில் போல இனிமையாக கூவிக் கொண்டிருக்கும் உன் நற்பேச்சுக்கள், என் காதுகளை வந்து அடைந்தன. பரலோகத்தில் இருக்கும் முன்னோர்களும் கேட்குமாறு இதனை சொல்வாயாக. 

எலெ என்ன கண்கெ மங்களவப்ப பட்ட ப

ல்மொலெய மோஹனரன்னெ கேளு

ஷிலெ வக்‌ஷதவர சித்தவ கரகிஸுவ நை

திலெயாண்மனந்தென்ன கவிதெ ||3 

மங்களங்களை கொடுப்பதாக, பெரிய மார்புகளுடன் மனதை மயக்குவதான உடற்கட்டுடன் இருக்கும் பெண்ணே கேள், என் காவியம், கல் போன்ற இதயம் கொண்டவர்களின் சித்தத்தையும் கரைக்கும் சந்திரன் இருப்பதைப் போல ஆகும். 

***

Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி