#14 - சந்தி 2 - பத்யங்கள் 4,5,6,7 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை
***
ஈ காவ்யகாதிவர்ணனெ யாவுதெனெ
ர
த்மாகரனிளெவெண்ணினுடெய
மேகலெயந்ததி பரிவேஷ்டிஸிர்த
பஹு
தேக ஸம்ப்ரமவனேனெம்பெ ||4
இந்த பூமிதேவியின் புடவை சரியாதவாறு, அவளது இடுப்பைச் சுற்றிலும் ரத்னமயமான ஒட்டியாணம் இருப்பதைபோல, இந்த சமுத்திரம் பூமியை சுற்றியிருக்கிறது. அதைப் போல இந்த காவியத்தின் வர்ணனை இருக்கிறது. இதனுடைய சிறப்பினை நான் என்னவென்று சொல்வேன்.
நீரானெ நெகளு பாடீன கமட ஷிம்ஷு
மார கர்கட ஜள்ளூக
கோராஹி மொதலாத துஷ்டஜந்துகளிந்த
வாராஷி கண்கெ ஷோபிஸிது ||5
நீர்யானை, முதலை, மீன், ஆமை, நண்டு, அட்டை, பயங்கரமான பாம்புகள் ஆகிய துஷ்ட ஜந்துக்களால் அந்த சமுத்திரம் திகழ்ந்தது.
தண்டதண்டதி ஹொரவளயதி டிண்டீர
பாண்டுர ஷங்க ப்ரவாள
துண்டு முத்துகளிந்த மேரெயப்திய
கொர
ள்தண்டெயந்திர்துதேனெம்பெ
||6
கரைகளை கடந்தவாறு பாய்ந்து கொண்டிருந்த அந்த சமுத்திரத்தில், கடற்கரையில், வந்ததான அதன் நுரை, சிப்பி, வெள்ளை சங்கு, பளபளக்கும் முத்துக்கள் ஆகியவை, கழுத்து மாலைகளைப் போல தென்பட்டன.
தெய்வாதீனதி வஜ்ரெ மைனாகன
கைவர்த்திஸீ கொலலெந்து
வைவஸ்வதனொலு பஹனெந்து கடலள்ளெ
ஹொய்வந்ததொளு கம்பிஸிது ||7
பகவந்தனின் ஆணைப்படி, இந்த்ரன், மைனாகனை (ஹிமவந்தனின் மகனை) போரிட்டு கொல்வதற்கு சூரியனைப் போல வருகிறான் என்று கடல் கொந்தளித்தது, நடுங்கியது போல இருந்தது.
***
Comments
Post a Comment