#15 - சந்தி 2 - பத்யங்கள் 8,9,10,11 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை
***
ஹொத்திரலுர்விய ஹெரஸாரு ஸாரெந்து
புத்தி ஹேளெ கேளதிரலு
கத்திஸி தெரெகெய்களிந்த தாடிஸுவந்தெ
குத்திது ஜலநிதி தடவனு ||8
இப்படியாக பாய்ந்து வந்த கடல், பூமியை பின்னே போ என்று புத்தி கூறினாலும், அதனை கேட்காதபோது, தன் அலை என்னும் கைகளால் அந்த பூமியை தள்ளுவதைப் போல, கடற்கரையை கடல் குத்தியது / தள்ளியது.
வேததஸ்கரன தன்னொளகிட்டுகொண்டப
ராதக்கெ பொடமடதிரலு
மாதவனப்பணெயந்தெ மரளி பந்தா
காதுது கடலோட பரத ||9
வேதங்களை திருடிக் கொண்டு சென்ற கள்ளனை, தனக்குள் அடக்கிய அபராதத்திற்கு நமஸ்கரிக்காமல் அலையானது சென்றுவிட, மாதவனின் ஆணைப்படி, மறுபடி திரும்பி குதித்து வந்தது போல இருந்தது அந்த அலை.
அம்புதி மத்யத தரெயொளகெ சதுராஸ்ய
நெம்ப வித்யாதிகனொலிது
கம்பஸூத்ரவ ப்ரதிஷ்டெய மாடிதந்ததி
பொம்பெட்ட கண்கெ ராஜிஸிது ||10
கடலின் நடுவில் இருந்த பூமியில், பிரம்மன் கம்பசூத்திரத்தைப் (படகில் நடுவே கயிற்றினை கட்டுவதற்காக இருக்கும் கம்பம்) ப்ரதிஷ்டை செய்ததைப் போல இருந்ததான, தங்கமயமான ஒரு மலை ஒளிர்ந்தது.
ஆ ஷரதிய மத்யதலி ஸுவர்ணதாதி
சேஷ தா நெட்டனெ நிந்து
ஸ்ரீஷன வைகுண்டவ நோடுவந்தெ ஷை
லேஷ ஹேமாத்ரி ரஞ்ஜிஸிது ||11
அந்த கடலின் நடுவில் தங்கமயமான சேஷன் தான் செங்குத்தாக நின்று, பகவந்தனின் வைகுண்டத்தை பார்ப்பதைப் போல, அந்த ஹேமாத்ரி மலையானது ஒளிர்ந்தது.
***
Comments
Post a Comment