#16 - சந்தி 2 - பத்யங்கள் 12,13,14,15 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

எம்பத்துநால்கு லக்‌ஷத ஜீவருக

ளெம்ப பீஜவ ஸ்ருஷ்டிகர்த்த

மும்பெளஸிகெ பணதவ கட்டிதந்ததலி

பொம்பெட்ட கண்கெ ரஞ்ஜிஸிது ||12 

84 லக்ஷங்களால் ஆன ஜீவர்கள் என்னும் பீஜத்தின் ஸ்ருஷ்டி கர்த்தனானவன் பகவந்தன், இந்த பீஜங்களை அடுத்து விளைவிக்க மூட்டையை கட்டியதைப் போலஅந்த மலையானது கண்களுக்கு ஒளிர்ந்தது.

 ஆ பர்வதத தக்‌ஷிண பாகதி ஜம்பூ

த்வீபத மத்யதொளிர்து

ஸோபஸ்கரவெத்த நிகிலதேஷகள ஸ்வ

ரூபவனேனு பண்ணிஸலி ||13 

அந்த மலையில் தெற்கு திசையில், ஜம்பூத்வீபத்தின் நடுவில் இருக்கும், அனைத்து பொருட்களையும் (சராசர) தாங்கியிருக்கும் அனைத்து தேசங்களின் ஸ்வரூபத்தினை (அழகினை) நான் எப்படி வர்ணிப்பேன்?. 

மாளவ மகத காஷ்மீர குஜ்ஜர கௌள

லாள கொஸல மேண் போட

சோள கன்னட வங்க சௌட ஹொய்ஸள மலெ

யாள தேஷகளொப்பிதவு ||14 

மாளவ, மகத, காஷ்மீர, குஜ்ஜர, கௌள, லாள, கோஸல, மேன்மையான போட, சோள, கன்னட, வங்க, சௌட, ஹொய்ஸள, மலெயாள ஆகிய தேசங்கள் அங்கு இருந்து ஒளிர்ந்தன. 

இந்திவு மொதலாத பஹுதேஷதலி ஸ்ரீ

காந்தங்கெ தவரூரெனிஸி

ஸந்தஸவடெதுதா ஸௌராஷ்ட்ர ஸகல தி

கந்தக்கெ ஸத்கீர்த்திவடெது ||15 

இத்தகைய பல தேசங்களில், ஸ்ரீகாந்தனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு பிறந்த வீடு எனப்படுவதான ஸௌராஷ்டிரா நாடு, அனைத்து திசைகளிலும் புகழைப் பெற்று ஒளிர்ந்தது. 

***


Comments