#18 - சந்தி 2 - பத்யங்கள் 20,21,22,23 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை
***
பொடெ எம்புது கந்தஷாலியொளு கையலி
கொடெயெம்பராத பத்ரவனு
தடெயொம்புதஹி மந்த்ரதொளகல்லதெ
பே
ரெடெயொளீ ஷப்தகளில்ல ||20
தானியங்கள் வைக்கும் அறைகளிலிருந்து, அனைவருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்க, தங்குவதற்கு இடம் இல்லை என்றும் சொல்லாமல், தடை (போதும்) என்ற சொற்கள் வெறும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படுகின்றவே தவிர, உபசரிப்பதில் இவை பயன்படுத்தப்படுவதில்லை.
கண்டகவெம்புது கேதகியொளு ராஜ
கண்டகவெம்புதம்புஜதி
கண்டகவெம்புது ஹலஸினொளல்லதெ
பேரெ
கண்டகவாதேஷகில்ல ||21
கண்டக (முள்) என்பது பூவில் மட்டுமே உள்ளது; அந்த பெரிய கண்டக என்பது தாமரையில் உள்ளது; அதே கண்டக, பலா மரத்தில் உள்ளதே தவிர, வேறு எந்த கண்டகங்களும் (அபாயங்களும்) அந்த அரசுக்கு இல்லை.
தண்ட ஸன்யாஸி வர்கதொளுண்டு புனரபி
தண்டகோபாலரொளுண்டு
தண்ட புண்ட்ரேக்ஷு வாடியொளுண்டு
மிக்க
தண்டவாதேஷதொளில்ல ||22
அந்த தேசத்தில், தண்டத்தை பிடித்த சன்யாஸிகள் இருக்கின்றனர். மாடு மேய்ப்பவர்களிடம் கூட தண்டம் இருக்கிறது. கரும்புத் தோட்டங்களிலும் அந்த தண்டங்கள் இருக்கின்றன, இதை தவிர அந்த தேசத்தில் வேறு எங்கும் தண்டம் காணப்படவில்லை.
கட்டுவரு நிரிகெய நீவியொளகெ
கைகெ
கட்டுவரு கங்கணகளனு
கட்டுவரு தம்மில்லவெலெய முண்டிகெய
கட்டு குட்டெம்புதல்லில்ல ||23
புடவையை அணிந்து அதனை மடித்து இடுப்பில் கட்டுபவர்கள் உண்டு; மங்கல நிகழ்ச்சிகள் சமயத்தில் கைகளில் கங்கணங்களை கட்டுபவர்கள் உண்டு; தலை மேல் முண்டாசு கட்டுபவர்கள் உண்டு; இதை தவிர கட்டு, குட்டு என்னும் சொற்களே அந்த நகரத்தில் இல்லை.
***
Comments
Post a Comment