#19 - சந்தி 2 - பத்யங்கள் 24,25,26,27 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

குடில குந்தளதொளு மதுபான தொண்டெவ

ந்துடியொளு கடின காந்தெயர

கடகுசதொளகல்லதீ நுடிகளு ஸங்

கடிஸவு ஸௌராஷ்ட்ரதல்லி ||24 

வளைவு என்பது பெண்களின் தலை முடிகளில் பார்க்கலாம்; மதுபானத்தைப் போல இருக்கும் அவர்களின் உதடுகளில் பார்க்கலாம்; அவர்களின் பானை போன்ற மார்புகளில் பார்க்கலாமே தவிர, வளைவு என்பது சௌராஷ்ரத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது. 

ஹிடிவரு வாரனாரியர பல்மொலெகள

கடிவரு செந்துடிகளனு

உடிகெய ஸுலிவரு பல்லவாதரெயர

பொடவியொளு கரதிய முட்டனு ||25 

விலைமகள்களின் பெரிய முலைகளை பிடிப்பார்கள்; அவர்களின் சிவந்த உதடுகளை கடிப்பார்கள்; அவர்களின் ஆடைகளை அவிழ்ப்பார்களே தவிர, குடும்பப் பெண்களை வேறு யாரும் தொட மாட்டார்கள். 

கெரெபாவிகளிரத கக்காடினெடெயலி

தொரெநீர கம்பியொள்தரிஸி

நெரெதர்மிஷ்டரு நிர்மிதவனு மாடி

தரவட்டிகெகளொப்பிதவு ||26 

கிணறு, ஏரிகளிலிருந்து அடர் காட்டிற்கு செல்வதான தண்ணீரை, ஒரு வழிப்பாதை வழியாக கொண்டு வந்து, தர்மிஷ்டர்கள் பலர், வழிப்போக்கர்களுக்காக அவர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக, தண்ணீர்ப் பந்தல்களை நிர்மாணம் செய்தனர். 

படபத்த தீர்க்க தண்டக நிராஸ்ரிதர

மட புக்த ஷாலெ கம்பெஸெவ

கடபூரித கந்த ஷைத்யோதகதர

வடிகெய மனெகளொப்பிதவு ||27 

மிகப்பெரிய மூங்கில்களால் ஆன ஆதரவற்றோர் இல்லங்கள், மடங்கள், அன்ன சந்த்திரங்கள், நறுமணம் மிக்க சந்தனம் போல சுத்தமான தண்ணீர்ப் பானைகளைக் கொண்ட தண்ணீர் பந்தல்கள் ஆகியவற்றைக் கொண்ட வீடுகள் பல இருந்தன. 

***


Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி