#20 - சந்தி 2 - பத்யங்கள் 28,29,30,31 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

மாமரதடியல்லி மங்களமயவாத

லாமஞ்சதமள சப்பரதி

ஹேமாம்புருஹ மொக்கெ மொலெயரு நீர்விடி

தா மஹா ஸ்தலதொளொப்பிதரு ||28 

மாமரங்களின் அடியில், நறுமணம் மிக்க வெட்டி வேர்களின் மேல், மாடிகளில், தங்கமயமான, தாமரை மொட்டு போன்றதான முலைகளைக் கொண்ட பெண்கள், எப்போதும் தண்ணீர் பிடித்து (மேற்கண்ட) இடங்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.   

அம்பரதலி ப்ரதிபிம்பிஸுதிஹ குச

கும்ப தத்கும்பவெம்பந்தெ

கும்பான்வித கரகமலதி ஸ்த்ரீ நிகு

ரும்ப நீர்விடிது நிந்திஹுது ||29 

துணியில் பட்டு ப்ரதிபிம்பம் போல தோன்றுவதான, குடம் போன்ற முலைகளைக் கொண்ட பெண்கள், தங்களின் கைகளால், அந்த குடங்களில் தண்ணீர் பிடித்து நின்றிருந்தனர். 

களஷஸ்தன பாஹுமூல நிர்மளத கௌங்

குள தோள நெகஹி நீரெரெயெ

களத்ருஷ்ணெ பரிதூடமீண்டுவ நெவதி ஹெங்

கள முத்து மொகவ நிட்டிபரு ||30 

கலசத்தைப் போன்ற முலை, தூய்மையான அக்குள், நீளமான தோள்களால் அவர்கள் தண்ணீர் இறைக்க, தாகம் அடங்கியிருந்தாலும், மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் அந்தப் பெண்களின் முகத்தைப் பார்த்து தயங்கி நிற்பர். 

கடுரூபு கண்கெ மெய்கம்பு மூகிகெ மெ

ல்லுடி கொடகெகெ ஹெங்களெரெவ

குடிநீரினிம்பு ஜிஹ்வெகெ ஷைத்ய தனுவிங்

கிடிதுது பளலி பந்தவரிகெ ||31 

மோகத்தை தூண்டும் ரூபம் கண்களுக்கு, உடல் நறுமணம் மூக்கிற்கு, அவர்களின் மிருதுவான பேச்சு காதிற்கு, அந்தப் பெண்கள் இறைக்கும் சுவையான தண்ணீர் நாக்கிற்கு, என இவை அனைத்தும் சேர்ந்து, தாகத்தினால் வந்தவர்களுக்கு கடும் குளிர்ச்சியை தந்தது. 

***

Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி