#21 - சந்தி 2 - பத்யங்கள் 32,33,34,35 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி

இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்

தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்

சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை

*** 

ஸல்லிதோபய தடத ஸால்மரதொளு

பெல்லத பானகவனெரெது

அல்லத கெனெ மொஸரஷனவ கரெகரெ

தெல்லரிகுண படிஸுவரு ||32 

அழகான, சாலைகளில் இரு புறங்களிலும் வரிசையாக நின்றிருந்த மரங்களின் அடியில், வெல்ல பானகம் வைத்து, இஞ்சி தூவிய, உறை ஊற்றப்பட்ட தயிர் கலந்த சாதம் கலந்து அனைவருக்கும் அதனை பரிமாறினர். 

லோகதொளதி ஷீலவந்த ஸ்ரீவைஷ்ணவ

ரேகவ்ரதத பூஸுரரு

ஏகாந்தனிளதொளேகவாகிரெ ஸ்வயம்

பாகவ மாடி புஞ்ஜிபரு ||33 

உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணை உள்ள, ஏகவ்ரத செய்யும் ப்ராமணர்கள், தனியாக ஒரு வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தனித்தனியாக சமையல் செய்து உண்டு வந்தனர். 

நாகவல்லிய பர்ண சூர்ண கர்பூர

பொகத போள தாம்பூல

ராகபூரித கந்த குஸுமகளிந்தலி

போகவீவரு பார்வரிகெ ||34 

வெற்றிலை, சுண்ணாம்பு, கற்பூரம், பாக்கு இவை அனைத்தும் கலந்த தாம்பூலத்துடன், மிகவும் அன்புடன் நறுமணம் மிக்க பூக்களுடன் ஆகியவற்றை கொடுத்து, பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். 

குஸ்தரிசுவரல்லல்லி ஸலெ பளல்த ஸ

மஸ்தர த்ருகுயுகளக்கெ

விஸ்தரிஸுவொடாஷ்வர்யவெனிப விமல ஸ

ரஸ்தல கெரெகளொப்பிதவு ||35 

மிக நீண்ட பயணம் செய்து வந்தவர்களை, அனைவரையும், மிகவும் நன்றாக உபசரிப்பார்கள். அவர்களின் கண்களுக்கு மிகவும் வியப்பினை தரக்கூடிய ஏரியின் கரைகள் தென்பட்டன. 

***

Comments

Popular posts from this blog

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி