#22 - சந்தி 2 - பத்யங்கள் 36,37,38,39 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை
***
தொரெதாள்தெவன கார்முக ஸிஞ்ஜினியிந்த
நெரெ பாகிஸிதரெம்பந்தெ
அரெகல்லுகள கீலிஸிதேரிகளிந்த
கெரெகளொப்பிர்துவல்லல்லி ||36
ருத்ரதேவரின் வில்லினை, நாண் ஏற்றி அம்பு விட்டனர் என்பது போல, அரைக் கற்களால் கட்டப்பட்ட கரைகளைக் கொண்ட அந்த ஏரி, அங்கங்கு பார்ப்பதற்கு தென்பட்டது.
ஜலவித்தொடெனோ பானகர்ஹவல்ல ஸ
த்பலபோககொதகுவுதில்ல
மலெத மைனீரெந்து ஸிந்துவ ஜரெதிள
கோலிதீவ கெரெகளொப்பிதவு ||37
ஏரியில் தண்ணீர் இருந்தால் என்ன, அது குடிப்பதற்கு யோக்யமல்ல; பயன்படுத்த தகுந்ததல்ல; அபாரமாக இருக்கும் கழிவு நீர் போல, கடலை இழுத்து பூமியில் தோண்டி நிரப்பியதைப் போல இருந்தது.
மளெகாலதொளிப்தி பேஸகெயொளு காலு
ஹொளெயாதவெம்ப நிந்தெயனு
தளெயதெ தூபலி பொரமட்ட குல்யக
ளிளெயகலதி சலிஸுதிஹவு ||38
மழைக் காலத்தில் பிறந்து, வெயில் காலத்தில் வற்றி, அல்லது கழிவு நீர் கால்வாய்கள் என்பது போல பலரின் திட்டுக்களையும் அந்த ஏரி பெற்றது. ஏர் கொண்டு உழுத அகழிகளைப் போல அந்த ஏரிகள் இருந்தன.
பாகீரதி தேவியரு ஸாவிராரு மொக
வாகி ஸாகர ஸேர்வந்தெ
ராகிப பரிகாலுவெ ஸாவிராரு மொக
வாகி ஸத்வனவ ஸாரிதவு ||39
கங்காதேவி ஆயிரக்கணக்கான முகங்களைக் கொண்டு, கடலை சென்று சேர்வது போல, இந்த கால்வாய்கள் ஆயிரக்கணக்கான முகங்களை கொண்டு நிலம், தோட்டங்களை சென்று சேர்ந்தன.
***
Comments
Post a Comment