Posts

#26 - சந்தி 2 - பத்யங்கள் 52,53,54,55 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  அந்தொம்மெ வராஹாவதாரதலி கோ விந்தெ தன்னய பீதாம்பரவ குந்ததெ பூமிகெ போதிஸிதந்திருவுது கந்தஷாலிய வன களிது ||52   முன்னர் ஒரு முறை ஸ்ரீஹரி , வராக அவதாரத்தில் , தன்னுடைய பீதாம்பரத்தை பூமிக்கு போர்த்தினால் என்பது போல - அறுவடை செய்து அறுக்கப்பட்டு போடப்பட்ட நெற்கதிர்களைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது .   தாளிம்ப கர்ஜூர த்ராக்‌ஷி ஸௌரபவ தாளிதனேக பூதோட கேளிய வனகளித்தவு புர லக்‌ஷ்மிய தாளிய மரகததந்தெ ||53   மாதுளை , கர்ஜூர , த்ராக் ‌ ஷை , நறுமணம் மிக்க பூந்தோட்டம் , தேங்காய் தோட்டங்கள் ஆகியவை இருந்தன . இவை அனைத்தும் அந்த ஊர் தெய்வமான லட்சுமிதேவியின் தாள மரத்தைப் போல பச்சை பசேலென்று இருந்தன .   பலஸு நேரிலு சூத பிசுமந்த ந்யக்ரோத சலபத்ர பில்வாமலக லலிதாஷோக புன்னாக பாதரி ஸலெ கோ மல ஸாலுமரகளொப்பிதவு ||54   பலா , அருகம்புல் , மா , வேம்பு , ஆல , அரளி , பில்வ , நெல்லி , அசோக , ஆகிய பற்பல மரங்...

#25 - சந்தி 2 - பத்யங்கள் 48,49,50,51 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  ஆகரதொளு ரஸதாளி பிருகாளியிந் தாகி ஒந்தரொளகொந்து ஹளசி மேகோளொடெதினிரஸத ஸரியொளு க்‌ஷீர ஸாகர தும்பிதந்திஹுது ||48   அந்த தோட்டங்களில் , ரஸம் நிறைந்த அந்த கரும்புகள் , வீசும் சூறாவளி காற்றினால் அசைந்தாடி , ஒன்றுக்கொன்று இடித்துக் கொண்டு , அதனால் அந்த கரும்பின் சாறு ( பால் ) வழிந்து , அந்த இடமே , பாற்கடல் போல காட்சியளித்தது .   மிண்டிவெங்களனகலித சதுரரு தம்ம தண்டிப ஸ்மரசாபவெந்து பண்டி பெர்குடுகோலுகளிந்தலடிகிக்கி கண்டிஸுவரு கப்புகளனு ||49   பருவம் வராத மனைவியரிடமிருந்து தூரம் இருக்கும் ஆண்கள் , தம்மை தண்டிக்கும் மன்மதனின் வில் இதுவே என்று நினைத்து , சிறு கரும்புகளை , பெரிய கரும்புகளால் ( அடிப்பது போல ) திட்டுவார்கள் .   பாலெய கொரளு ஹொங்கோரெ ஸுஸ்வர கரணெ லீலா காத்ர அச்சுமணெ பாலிர்த குச கொப்பரிகெ நிட்டெஸள்க ண்ணாலெய மனெகளொப்பிதவு ||50   பெண்களின் கழுத்து , தங்கப்பிடி போட்ட மண்வெட்டி ...

#24 - சந்தி 2 - பத்யங்கள் 44,45,46,47 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  கொனெவாளெ குஸுமமஞ்ஜரி முக்ய ஷாலிய கொனெகளனகிவ கீரிகளு கொனெகண்ண பாமரியர திட்டிகண்டுரு ள்கணெயெந்து கொனெகெ பாரிதுவு ||44   வாழையின் நுனி , பூக்கள் மற்றும் நெல்லினை தின்ன வரும் கிளிகள் , மிகவும் கவனத்துடன் காவல் காத்துக் கொண்டிருக்கும் பெள்களின் பார்வையைக் கண்டு , கூரான வேல் என்று நினைத்து , பாய்ந்து பறந்தன .   ஸுடிவெத்து கொனெயிந்தெ மகுளெ பந்தெரகுவ நிடிலாக்‌ஷன ஷத்ரு ஹயவ குடில குந்தலெயரத்தரிஸலவர தொண்டெவ ண்ணடிகெ பண்ணெந்தெரகிதுவு ||45   அப்படி பறந்து சென்று , மறுபடி சிறிது நேரத்தில் பறந்து வருவதான , ருத்ரதேவரின் எதிரியான காமனின் பறவையான கிளிகள் , அப்படிய் நெல்லை காவல் காத்து வரும் பெண்களின் அழகான குரலுக்கு மயங்கி விழுந்தன .   நெத்தியொளு பாருவ கிளிவிண்டு பஜ்ஜெய ஸத்திகெயந்தெ மண்டலிஸெ மத்தகாஷினியர திட்டி ஷங்கத காவ தெத்திஸிதந்தெ ஷோபிஸிது ||46   பச்சை வண்ண கிளிகள் , நெற்றியின் மே...

#23 - சந்தி 2 - பத்யங்கள் 40,41,42,43 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  ஆபோ நாராயண தத்வமெந்து ப்ரா நோபனோள்வெரெத பூஸதிய ரூபாந்த ரோமாஞ்சனதந்தெ கந்த ஷா லீ பலதங்குரவிஹுது ||40   தண்ணீர் என்பது நாராயணனின் தத்வம் என்று , ப்ராணப்ரியனுடன் சேர்ந்த பூமாதேவியின் வியர்வையே ரூபம் எடுத்தததைப் போல , நெல்லின் முளை அங்கங்கு தோன்றி கண்களை பறித்தது .   பீகி பெளெது நபகடர்தொடெ தேவர்களா ரோகிப ஸவிகாரரல்ல போகி மாடுவுதேனுத லஜ்ஜிஸி தலெ வாகிதந்திஹுது ராஜான்ன ||41   மிகவும் அதிகமாக ( உயரமாக ) வளர்ந்து , வானத்தை தொட்டால் , தேவர்கள் அதனை உண்ண மாட்டார்கள் . ஆகவே , அவ்வளவு வளர்ந்து என்ன பலன் என்று கூறியவாறு , வெட்கத்துடன் தலை குனிந்து நின்றதாம் நெல் .   மடிகள காவ புளிந்தினியர ரூப படிகட்டபல்லவராரு முடி தோரமொலெய பாரதிந்தலுங்குர விடினடு பளுகவந்திஹுது ||42   அந்த நெற்களின் வயலை ( விதைகளை ) காக்கும் பெண்களின் ரூபத்தை யாரால்தான் வர்ணிக்க முடியும் ?. பானை போன்ற பெரிய முலைக...

#22 - சந்தி 2 - பத்யங்கள் 36,37,38,39 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  தொரெதாள்தெவன கார்முக ஸிஞ்ஜினியிந்த நெரெ பாகிஸிதரெம்பந்தெ அரெகல்லுகள கீலிஸிதேரிகளிந்த கெரெகளொப்பிர்துவல்லல்லி ||36   ருத்ரதேவரின் வில்லினை , நாண் ஏற்றி அம்பு விட்டனர் என்பது போல , அரைக் கற்களால் கட்டப்பட்ட கரைகளைக் கொண்ட அந்த ஏரி , அங்கங்கு பார்ப்பதற்கு தென்பட்டது .   ஜலவித்தொடெனோ பானகர்ஹவல்ல ஸ த்பலபோககொதகுவுதில்ல மலெத மைனீரெந்து ஸிந்துவ ஜரெதிள கோலிதீவ கெரெகளொப்பிதவு ||37   ஏரியில் தண்ணீர் இருந்தால் என்ன , அது குடிப்பதற்கு யோக்யமல்ல ; பயன்படுத்த தகுந்ததல்ல ; அபாரமாக இருக்கும் கழிவு நீர் போல , கடலை இழுத்து பூமியில் தோண்டி நிரப்பியதைப் போல இருந்தது .   மளெகாலதொளிப்தி பேஸகெயொளு காலு ஹொளெயாதவெம்ப நிந்தெயனு தளெயதெ தூபலி பொரமட்ட குல்யக ளிளெயகலதி சலிஸுதிஹவு ||38   மழைக் காலத்தில் பிறந்து , வெயில் காலத்தில் வற்றி , அல்லது கழிவு நீர் கால்வாய்கள் என்பது போல பலரின் திட்டுக்கள...